பாகிஸ்தான் விமான நிறுவனத்தின் விமானம் (PK-303) விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த அனைவரும் காணாமல் பேயிருந்த நிலையில், இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் குறித்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த விமானம் கராச்சியில் இருந்து லாகூருக்கு சென்ற வேளை ஜின்னா சர்வதேச விமானநிலையத்தில் இன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

குறித்த விமானத்தில் 91 பயணிகளும், எட்டு விமான ஊழியர்களும் பயணித்துள்ளார்கள். இவர்களில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் விபத்து இடம்பெற்ற இடத்திலுள்ளவர்களா அல்லது விமானத்திலிருந்தவர்களா என்ற தகவல் வெளியாகவில்லை.

விபத்தில் உயிரிழந்தவர்களின் தொகை அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

இதேவேளை, விழுந்து நொருங்கிய விமானத்தின் விமானி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் என பாகிஸ்தான் விமான சேவையின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.