பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

லாகூரில் இருந்து கராச்சிக்கு சென்ற விமானம் தரையிறங்கும் போது விபத்து இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த விமானத்தில் 91 பயணிகளும், எட்டு விமான ஊழியர்களும் பயணித்துள்ளார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்தில் வீடுகள் சேதமடைந்துள்ளமையால், சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் சென்றுள்ளன.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்கள், விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து புகை எழுவதைக் காட்டுகிறது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக விமானங்களை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் அனுமதிக்கத் தொடங்கிய சில நாட்களில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.