2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று 5 ஆவது நாளாக பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று 5 ஆவது நாளாக இடம்பெற்று வந்த நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி காலை வரை குறித்த மனுக்கள் மீதான பரிசீலனையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

5 ஆம் நாளான இன்றையதினம் மனுக்கள் மீதான பரிசீலனையின் போது அரச தரப்பு சார்பில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா , ஜனாதிபதி செயலர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆகியோர் ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.