பயிற்சிகளை ஆரம்பிக்கத் தயாராகும் இலங்கை கிரிக்கெட் அணி

Published By: Digital Desk 3

22 May, 2020 | 03:28 PM
image

(நெவில் அன்தனி)

தம்மால் வழங்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி தேசிய குழாம்கள் பயிற்சிகளை ஜூன் முதலாம் திகதி ஆரம்பிக்கலாம் என விளையாட்டுத்துறை அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. 

இதற்கு அமைய இலங்கை கிரிக்கெட் அணியினர் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி பயிற்சிகளை ஆரம்பிக்கத் தயாராகி வருகின்றனர்.

எனினும் அரசாங்கத்திடமிருந்து அதற்கான அனுமதி கிடைத்தால் மாத்திரமே அவர்களால் பயிற்சிகளை ஆரம்பிக்ககூடியதாக இருக்கும்.

வேகப்பந்துவீச்சாளர்களுக்கான பயிற்சிகளே முதலில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் உயிரியல் பாதுகாப்பு முறைகள் செவ்வணே பின்பற்றப்படுவதுடன் ஆரோக்கியமான சூழலியே பயிற்சிகள் யாவும் இடம்பெறும்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன, இருபது 20 அணித் தலைவர் லசித் மாலிங்க ஆகியோருடன் அண்மையில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து பயிற்சிகளை ஆரம்பிக்க தீர்மானித்ததாக தலைமைப் பயிற்றுநர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, உதவிப் பயிற்றுநர் க்ரான்ட் ப்ளவர், தெரிவுக் குழு உறுப்பினர் அஷன்தா டி மெல், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மருத்துவ நிபுணர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கொவிட் - 19 தாக்கத்துக்கு மத்தியில் பயிற்சிகளுக்கு திரும்புவதில் வீரர்களுக்கு சற்று அச்ச உணர்வு இருப்பதை மிக்கி ஆர்த்தர் ஒப்புக்கொண்டார்.

இதேவேளை, சரவ்தேச கிரிக்கெட் பேரவை கிரிக்கெட் குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் ஐ.சி.சி. தீர்மானித்துள்ள வரம்புகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் பின்பற்றவேண்டிவரும் என்பதையும் ஒப்புக்கொண்ட கிரிக்கெட் குழு உறுப்பினர்களில் ஒருவரான ஆர்த்தர், அதன் பின்னரே வீரர்கள் பயிற்சிகளுக்கு திரும்பக்கூடியதாக இருக்கும் என்றார்.

'உயிரியல் பாதுகாப்பு சூழல் நலமாக இருக்கின்றது என்ற தகவலும் தொற்று உங்களுக்கு பரவினால் அது உங்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விளக்கமும் உலகெங்கும் உள்ள வைத்தியக் குழு அதிகாரிகளிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொள்ளும்போது, வீரர்கள் அவற்றை நன்கு புரிந்து ஜீரணித்துக்கொண்டால் எல்லாம் நலமாக இருக்கும்' என்றார் அவர்.

'அதனைத் தொடர்ந்து முதல் 20 நாட்களுக்குப் பின்னர் முழு குழாத்தையும் பெரும்பாலும் பயிற்சியில் ஈடுபடுத்தக்கூடியதாக இருக்கும். அப்போது உயரியல் பாதுகாப்புச் சூழலில் சிறப்பாக இருந்தால் ஹம்பாந்தோட்டைக்கோ கண்டிக்கோ ஒரு வாரத்துக்கு சென்று நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ளலாம். அதன் பின்னர் எமது இலக்கை நோக்கி செல்லாம் என்பதை உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்' என அவர் மேலும் கூறினார்.

கொவிட் - 19இனால் இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடைபெறவிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கைவிடப்பட்டது. தொடரில் விளையாட வருகை தந்திருந்த இங்கிலாந்து அணியினர், தொடர் ஆரம்பமாவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் பயணத்தை இரத்துச் செய்துகொண்டு நாடு திரும்பினர்.

இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் மார்ச் 19ஆம் திகதி ஆரம்பமாவதாக இருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49