இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கத்துடன் கைகோர்த்துள்ள அனா மரியின் உதவிக் கரம் தொடர்கின்றது

Published By: Digital Desk 3

22 May, 2020 | 02:06 PM
image

உள்ளதைக்கொண்டு நல்லதைச் செய் என்ற வாக்குக்கு அமைய ஏ குவின்ட் ஒண்டாஜ்ஜி மன்றத்தின் நல்லெண்ணத் தூதுவரும் சரவ்தேச ஜிம்நாஸ்டிக் வீராங்கனையுமான அனா மரி ஒண்டாஜ்ஜி தொடர்ந்தும் இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் சங்கத்துடன் கைகோர்த்து உதவி வருகின்றார்.

தற்போது அவர் கனடாவில் இருக்கின்றபோதிலும் சங்கத்தின் தலைவர் கருப்பையா ராமகிருஷ்ணனின் வேண்டுகோளுக்கு அமைய முன்னாள் தேசிய மெய்வல்லுநரும் விமலசேன பெரேராவுக்கு மாதாந்த சத்துணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளார்.

அனா மரியின் இந்த உதவியை அவரது சார்பில் விமலசேன பெரேராவிடம் சங்கத்தின் தலைவர் உட்பட குழுவினர் அண்மையில் வழங்கிவைத்தனர்.

'நாம் எல்லோரும் சமமானவர்கள். இங்கு நாம் ஒரு தேவையைக் கருதி இணைந்துள்ளோம்' என கனடாவிலிருந்தவாறு தனது கருத்தை அனா மரி பகிர்ந்துகொண்டார்.

'மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்த நான் விரும்புகின்றேன். ஆரோக்கியம், உயிர்பாதுகாப்பு, கல்வி, உணவு, தங்குமிடம், பால்சமத்துவம், வளர்ப்பு, துஷ்பிரயோகம், பெண்கள், இடர்நெர உதவிகள், அகதிகள், விளையாட்டுத்துறை அபிவிருத்தி, கலை, கலாசாரம், பாரம்பரியம், கிராமிய எழுச்சி மற்றும் நகரமயமாக்கல் போன்ற விடயங்களில் முன்னேற்றம் ஏற்படுவதைக் கவனத்தில் கொண்டு செயற்படுவேன்' என்றார் அவர்.

விமலசேனவுக்கு உதவுவதற்கு முன்பதாக வெளிக்கள நிலைவரங்கள் தொடர்பாக செய்திகளை சேகரிக்கும் மற்றும் படப்படிப்பாளர்களுக்கு பாதுகாப்பு (சுகாதார) சீருடைத் தொகுதியையும் அனா மரி அன்பளிப்பு செய்திருந்தார்.

இதுவே இலங்கை தொழில்சார் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் வாயிலாக அனா மரி வழங்கிய முதலாவது கொவிட் - 10 உதவியாகும்.

கனடாவில் வாழ்ந்துவரும் அனா மரி ஒண்டாஜ்ஜி, சர்வதேச ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்குபற்றிய முதலாவது இலங்கையராவார்.

2017 உலக தளாலய ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப் மற்றும் கோல்ட் கோஸ்ட் 2018 பொதுநலவாய விளையாட்டு விழா, 2018 ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றில் அனா மரி பங்குபற்றியிருந்தார். சூரிச் கிண்ணம் 2020 தாள லய ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனா மரி, ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்ற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். (என்.வீ. ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21