எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய இரு நாட்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடருமெனவும் ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை 23 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நாடளாவிய ரீதியில் அமுலாகும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 5 மணி வரை அமுலில் இருக்கும்.

அதனடிப்படையில் 24 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை மற்றும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய இரு நாட்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய் முதல் தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு காலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.

அதேவேளை, அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று ஊரடங்கு நிபந்தனைகளின் கீழ் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.