மாளிகாவத்தையில் 3 பெண்கள் உயிரிழப்பு ; கைதான வர்த்தகர் உட்பட 6 பேருக்கும் விளக்கமறியல் !

22 May, 2020 | 09:24 AM
image

கொழும்பு, மாளிகாவத்தையில் மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் உட்பட 6 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் நேற்றையதினம் புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் போது, ஒன்று திரண்ட மக்களால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.  

நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் கொழும்பு 10, மாளிகாவத்தை, ஜும் ஆ மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள  வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் வாகன உதிரிப்பாக களஞ்சிய  வளாகத்தில் இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.   

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 பெண்களுக்கு மேலதிகமாக 9 பேர் காயமடைந்த நிலையில்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளதுடன் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாகவும் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் லயனல் முஹந்திரம் தெரிவித்தார்.

இதேவேளை, எவ்வித கவனமும் இன்றி மிக ஆபத்தான முறையில் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்தமை,  ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் அதனை மீறி மக்களை ஒன்று திரட்டியமை,  கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய சமூக இடைவெளியை பேணாமல் நடந்துகொண்டமை ஆகியவற்றின் ஊடாக மூன்று பேரின் மரணத்துக்கு காரணமாக இருந்தமை தொடர்பிலேயே இந்த ஆறுபேரையும் கைது செய்ததாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் உள்ளிட்ட 6 பேரும் எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரை கொழும்பு பிரதம நீதவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47