கேப்பாப்புலவு விமானப்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த இரு கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி!

Published By: Digital Desk 3

21 May, 2020 | 08:50 PM
image

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த  கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அவ்வாறு கொரோனாத் தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட இரு கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு இன்றையதினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

தனிமைப்படுத்தலுக்காக வெலிசறையிலிருந்து கேப்பாப்புலவு  விமானப்படைத் தளத்திற்கு அண்மையில் 400 கடற்படையினர் அழைத்துவரப்பட்டனர்.

அவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களில் 99 பேருக்கு நேற்று முன்தினம்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு கொரோனாத் தொற்று உறுதிப்பட்ட இருவரும் வெலிகந்தை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெலிசறையில் இருந்து அழைத்துவரப்பட்டுள்ள ஏனைய கடற்படையினருக்கான பரிசோதனைகள் நாளை, மற்றும் நாளை மறுதினங்களில் இடம்பெறும் என்றார்.

இந்நிலையில் இலங்கையில் இன்றையதினம் இதுவரை 17 பேர் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்தில் இருந்த கடற்படை வீரர்கள் என்பதுடன் ஏனைய 15 பேரும் டுபாயில்ருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருப்பவர்கள் ஆவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13