ஊரடங்கு காரணமாக சச்சின் டெண்டுல்கர் தனது மகனுக்கு முடி திருத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் கிரிக்கெட் ஜாம்வனான சச்சின் டெண்டுல்கர் முடி திருத்துனர் எனும் புது அவதாரத்தை எடுத்துள்ளார் என கூறப்பட்டு வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு உலகமே ஸ்தம்பிதம் அடைந்துள்ளதால், அநேகமான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும்,  சில விளையாட்டுப்  போட்டிகள் இரத்து செய்யப்பட்டும் உள்ளன.

பொது ஊரடங்கு காரணமாக  விளையாட்டு பிரபலங்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் விளையாட்டு பிரபலங்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இணையதளங்களின் மூலம் பல்வேறு விளையாட்டு சார்ந்த சவால்களில் ஈடுபட்டு தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஊரடங்கு காரணமாக நகர் புறங்களில் இயங்கி வரும் முடி திருத்தும் மற்றும் அழகு சாதன கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படாததால் நகரவாசிகள் தவித்து வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் சச்சின் டெண்டுல்கர், தனது சமூகவலைதள பக்கத்தில் தன் மகன்  அர்ஜூனுக்கு முடி திருத்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.   இணையதளத்தில் வைரலாகியுள்ள இந்தப்படங்கள் மூலம், ஏனைய மக்களும் தங்களுக்கான முடி திருத்தும் பணிகளை வீட்டுக்குள்  செய்யவதற்கான ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.