திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 800 போதை மாத்திரைகளை வைத்திருந்த இளைஞரொருவரை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று(21.05.2020) உத்தரவிட்டார்.ஜின்னா நகர், புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வவாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.