கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில், நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற நிவாரண நடவடிக்கையொன்றில்  ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளதுடன்  5 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.