13 ஆவது ஐ.பி.எல். போட்டித் தொடர் எதிர்வரும்அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) உறுப்பினரான அன்ஷுமன் கெய்வாட் தெரிவித்துள்ளார்.

பி.சி.சி.ஐ. யின் உயர்மட்ட குழு உறுப்பினரான  அன்ஷுமன் கெய்க்வாட் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளதாவது,

“இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் உலக இருபது 20 கிண்ணத் தொடர் நடக்குமா என்பது சந்தேகம் தான். இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டாலோ அல்லது இரத்து செய்யப்பட்டாலோ மாத்திரமே  ஐ.பி.எல். போட்டி நடக்கும். 

அதற்குரிய காலக்கட்டமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகும். அதுவும் அதன்போது இந்தியாவிலுள்ள சூழ்நிலையைப் பொறுத்தே முடிவு செய்ய முடியும். ஆனால் இப்போதைக்கு ஐ.பி.எல். குறித்து எதுவும் சிந்திக்கவில்லை” என்றார்.