பளை பகுதியில் மோட்டார் சைக்கில் ஒன்று விமானபடைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் உடன் மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பளை நகர் பகுதியில் வைத்து சடுதியாக எதிர் திசைக்கு திரும்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த விமானப்படைக்கு சொந்தமான அம்பியூலனஸ் வண்டியுடன் மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நாவற்குளியை சேர்ந்த அந்தோனி அஞ்சலஸ் வயது 51 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பளை பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்