அம்பன் சூறாவளியின் தாக்கம் குறைவடையும் - வளிமண்டலவியல் திணைக்களம்

21 May, 2020 | 08:56 AM
image

நாட்டின் வானிலையில் அம்பன் சூறாவளியின் தாக்கம் இன்றிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பன் என்ற சூறாவளியானது நேற்று (2020 மே 20ஆம் திகதி) முற்பகல் 08.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 1420 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 19.80 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.70 நு இற்கும் இடையில் வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கும் மேலாக மையம் கொண்டுள்ளது.

இது வடக்கு – வடகிழக்கு திசையில் இலங்கையை விட்டு விலகி நகர்ந்து நேற்று (மே 20ஆம் திகதி) பிற்பகலளவில் வங்காளதேசக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்பட்டது.

தென்,மேல், சப்ரகமுவ,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:50:58
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24
news-image

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட...

2026-08-08 16:47:17
news-image

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட...

2026-08-08 16:46:20
news-image

அல்லைப்பிட்டிச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து...

2026-08-08 16:39:43
news-image

விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் இரண்டு தமிழ்...

2026-08-08 16:22:27