இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு : இறுதித் தொற்றாளர் குவைத்திலிருந்து வந்தவராம் !

21 May, 2020 | 06:52 AM
image

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1027 இலிருந்து 1028 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் அண்மையில் குவைத்திலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருப்பவர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த 1028 தொற்றாளர்களில், 585 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இந்த கடற்படை வீரர்களுடன் சேர்த்து இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 597 பேர் முப்படைகளை சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன. 435  தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய்தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் 112 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 9 மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

 இதனிடையே, இலங்கையில் கடந்த 20 நாட்களுக்குள் சமூகத்தில் இருந்து எந்த தொற்றாளரும் கண்டறியப்படவில்லை எனவும், இது ஒரு ஆரோக்கியமான நிலைமை எனவும் சுகாதார அமைச்சின் பொது மக்கள் சுகாதாரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தொற்றுநோய் தடுப்பு குறித்த விஷேட வைத்திய நிபுணர்  தெரிவித்தார். 

இந்நிலையில் தற்போது இயங்கு நிலையில் உள்ள கடர்படை கொரோனா கொத்தணி பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், அது குறித்த விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08