மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் ஜயங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும்  பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது. கடந்த ஒருவாரத்திற்கு முன்பு இடம்பெற்ற வாய்த்தர்க்கம் பின்னர் கோஸ்டி மோதாலக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

2 பிள்ளைகளின் தந்தையான  விஜயபாலன் நிரோசன் வயது (25) என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மீனவரான இவர் தனது நண்பரின் வீட்டிற்கு சென்று திரும்பும் போது ஒரு கோஷ்டியினர் வழி மறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதேவேளை இரு கோஸ்டியினருக்கு இடையே இடம்பெற்ற மோதலின் போது மிளகாய்தூள் வீசப்பட்டதன் பின்னர், இவர் கூரிய ஆயுதத்தால்  தாக்கப்பட்டதாகவும் எதிர்த்தரப்பில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதாகவும் இரு வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கொல்லப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற பிரச்சினையின்போது, இரு தரப்பினரது சுற்றுவேலிகள் சேதமாக்கப்பட்டுள்ளதையடுத்த சம்பவம் தொடர்பில் நால்வர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர். ஏறாவூர் பொலிசார்  சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.