கேன் வில்லியம்ஸனின் டெஸ்ட் தலைமைப் பதவிக்கு ஆபத்து என்ற செய்தி உண்மையில்லை என்று நியூஸிலாந்து கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

தலைசிறந்த துடுப்பாட்ட வீரரான கேன் வில்லியம்ஸன், நியூஸிலாந்து கிரிக்கெட்  அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிகளுக்கும் அணித்தலைவராக செயற்பட்டு வருகிறார்.

இவரது தலைமையின் கீழ் அவ்வணி கடைசியாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை  2 க்கு 0 என்ற கணக்கில் வென்றிருந்தது.

இந்நிலையில், கேன் வில்லியம்ஸனின் டெஸ்ட் அணியின் தலைமைப் பதவிக்கு ஆபத்து என செய்தி வெளியானது. இந்நிலையில் அந்த செய்தியில் உண்மையில்லை என்று நியூஸிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன் நியூஸிலாந்து அவுஸ்திரேலியா சென்று விளையாடியது. அப்போது நியூஸிலாந்து படுதோல்வியடைந்தது.

அப்போது டெஸ்ட் அணிக்கான தலைமை பதவியை டொம் லெத்தமிடம் கொடுக்க பயிற்றுநர் விரும்பியிருந்தார். அப்படி கொடுத்தால் வில்லியம்ஸனின் சுமை குறையும் என ஆலோசனை வழங்கியதாக செய்தி வெளியாகியிருந்தது.

இதன் காரணமாக நியூஸிலாந்து டெஸ்ட் அணித்தலைமை பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என  நியூஸிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.