தலிபானியர்களினால் ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்காண தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டபோதிலும், தலிபான் தலைவர் புதன்கிழமை தனது குழு அமெரிக்காவுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய புனித ரமழான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் அடுத்த வாரம் ஈத் அல் பித்ர் விடுமுறைக்கு முன்னதாக வெளியிடப்பட்ட ஒரு அரிய செய்தியில், அமெரிக்காவின் மிக நீண்ட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை வழங்கிய வாய்ப்பை "வீணாக்க வேண்டாம்" என்று ஹைபதுல்லா அகுந்த்டா வாஷிங்டனை வலியுறுத்தினார்.

அத்துடன் இஸ்லாமிய எமிரேட் இந்த ஒப்பந்தத்தில் உறுதியாக உள்ளது. மேலும் அதன் சொந்த உறுதிப்பாட்டை மதிக்க வேண்டும் என்றும் இந்த முக்கியமான வாய்ப்பை வீணடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த இருதரப்பு உடன்படிக்கையைத் தடுக்கவும், தாமதப்படுத்தவும், இறுதியில் தடம் புரள வைக்கவும் யாருக்கும் வாய்ப்பளிக்க வேண்டாம் என்று நான் அமெரிக்க அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன் என்றும் தலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்டா மேலும் கூறினார்.

பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 2020 பெப்ரவரி 29 அன்று தலிபான் மற்றும் அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை முன்னுரிமையாக்கியுள்ளதுடன், தங்கள் படைகளைத் திரும்பப் பெறுவதை எளிதாக்கும் முயற்சியில், அமெரிக்க அதிகாரிகள் ஆப்கானிஸ்தானுக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா  தொடர்பான எந்த  கூட்டணிப் படையினரையும் தாக்குவதில்லையென தலிபான்கள் உறுதியளித்தனர். 

எனினும் அடையாளம் தெரியாத குழுக்களினால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. 

கடந்த வாரம் டஜன் கணக்கானவர்களைக் கொன்ற இரண்டு கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து ஆயுதமேந்திய குழுக்களுக்கு எதிராக தாக்குதல்களை முன்னெடுக்குமாறு ஆப்கானிய ஜனாதிபதி படையினருக்கு உத்தரவிட்டதை அடுத்து ஆப்கானிஸ்தான் படைகளுக்கு எதிரான தாக்குதல்களையும் தலிபான்கள் முடுக்கிவிட்டுள்ளனர்.

கடந்த வாரம், காபூலில் ஒரு மகப்பேறு மருத்துவமனை மீதான தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் அதே நாளில் ஒரு இறுதி சடங்கில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு 32 பேர் நங்கர்ஹார் மாகாணத்தில் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு தலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்) ஆயுதக் குழுவை ஆப்கான் ஜனாதிபதி, குற்றம் சாட்டிய போதிலும், இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் பொறுப்பேற்க தலிபான் மறுத்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி சல்மே கலீல்சாத், மகப்பேறு வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்) அமைப்பினர் தான் பொறுப்பு என குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, தலிபான் அந்த தாக்குதலுக்கு பொறுப்பல்ல 

அத்துடன் ஐ.எஸ்.ஐ.எல் குழுவானது தலிபான் சமாதான உடன்படிக்கையையும் எதிர்க்கிறது மற்றும் ஆப்கானிஸ்தானில் ஈராக் பாணியிலான குறுங்குழுவாத போரைத் தூண்ட முயள்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் வலையில் விழுந்து சமாதானத்தை தாமதப்படுத்த அல்லது தடைகளை உருவாக்குவதற்கு பதிலாக, ஆப்கானியர்கள் ஒன்றிணைந்து இந்த அச்சுறுத்தலை நசுக்கி வரலாற்று சமாதான வாய்ப்பைப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதன் பின்னணியிலேயே அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் தலிபானியர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.