கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் பாரியதோர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வல்லரசு நாடுகளே கொரோனாவால் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அதுபோல் வளர்ந்து வரும் நாடுகளும், ஏழ்மையான நாடுகளும் கடும் பாதிப்புக்கு தள்ளப்பட்டுள்ளன.



இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக உலக அளவில் சுமார் 6 கோடி மக்கள் கடுமையான வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக வங்கி தலைவர் டேவிட் மால்போஸ் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் வளர்ந்த பொருளாதாரங்கள் மூடப்படுவதால் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் வறுமையில் சிக்கி விடுவார்கள்.

சமீபத்திய காலங்களில் வறுமையை ஒழிப்பதில் நாம் செய்துள்ள முன்னேற்றத்தின் பெரும்பாலான பகுதி அகற்றப்படும்.

உலக வங்கி குழு விரிவான நடவடிக்கைகளை எடுத்து 100 நாடுகளுக்கு அவசர உதவி ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டத்தை ஏனைய நன்கொடையாளர்கள் முன் எடுத்து செல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள். உலகளாவிய நெருக்கடியை சமாளிக்கும் ஒரு பகுதியாக 100 வளரும் நாடுகளுக்கு 160 பில்லியன் டொலர் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி அனைத்தும் 15 மாதங்களில் வழங்கப்படும் என தெரிவித்தார்.