இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 5,611 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுதான் இந்தியாவில் ஒரே நாளில் பதிவான அதிகளவான கொரோனா தொற்று எண்ணிக்கையாகும்.

இந்தியாவில் இது வரை இல்லாத அளவாக ஒரே நாளில் 5,611 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 30,03 பேர் இதுவரை இந்தியாவில் கொரோனாவல் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவால் 1,06,750 பேர் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 42,298 பேர் குணமடைந்துள்ளார்கள்.

அதிகபட்சமாக இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 37136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1325 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்று உள்ள மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 688 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 12,448 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.