அமெரிக்கா, இஸ்ரேலுடனான அனைத்து ஒப்பந்தங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் பாலஸ்தீன் ஜனாதிபதி!

Published By: Vishnu

20 May, 2020 | 05:31 PM
image

பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இஸ்ரேல், அமெரிக்காவுடனான அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக செவ்வாயன்று அறிவித்துள்ளார். 

இஸ்ரேலிய திட்டங்கள் குறித்து விவாதிக்க பாலஸ்தீன் நகர் ரமல்லாவில் நடைபெற்ற அவசர கூட்டதின்போதே அப்பாஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டதாக பலஸ்தீன் செய்தி நிறுவனமான வாஃபா தெரிவித்துள்ளது.

ரமல்லாவில் பாலஸ்தீனிய தலைமைக் கூட்டத்தின் பின்னர் பேசிய 85 வயதான அப்பாஸ், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் எந்தப் பகுதியையும் இஸ்ரேல் இணைப்பது இரு மாநில தீர்வுக்கான வாய்ப்புகளை அழித்துவிடும் என்றார்.

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை முடிவுக்குக்கொண்டுவர அப்பாஸ் பல முந்தைய அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார். இந் நிலையில் தனது சமீபத்திய அறிவிப்பு நடைமுறையில் என்ன அர்த்தம் என்பது குறித்து அவர் எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை.

இதேவேளை துருக்கியின் ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கலின் தனது டுவிட்டர் பதிவில், 

மேற்குக் கரையை இணைப்பதற்கான இஸ்ரேலின் திட்டங்களை கண்டித்துள்ளதுடன், இதற்கு எதிராக சர்வதேச சமூகத்தை ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும் அழைப்பு விடுத்தார்.

அத்துடன் பாலஸ்தீனிய நிலங்களை ஆக்கிரமித்து கைப்பற்றுவதற்கு எதிராக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் துருக்கி ஆதரிக்கும் என்று காலின் கூறினார்.

இதனிடையே பாலஸ்தீனிய ஜனாதிபதி அப்பாஸின் அறிக்கை இஸ்ரேலின் குடியேற்றங்களையும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஜோர்தான் பள்ளத்தாக்கையும் இணைப்பதற்கான திட்டங்களுக்கு பதிலளித்துள்ளதாக அமைந்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை முன்னாள் போட்டியாளரான பென்னி காண்ட்ஸுடன் புதிய ஒற்றுமை அரசாங்கத்தில் சத்தியம் செய்தார். 

கூட்டணி ஒப்பந்தத்தின் கீழ், ஜூலை முதல் மேற்குக் கரையின் சில பகுதிகளை இணைப்பது குறித்து அரசாங்கம் விவாதிக்கவும் தீர்மானம் இதன்போது எட்டப்பட்டது.

இந்த இணைப்புத் திட்டங்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு திட்டத்தின்படி, ஜனவரி பிற்பகுதியில் வெளியிடப்பட்டன. 

எனினும் ட்ரம்பின் திட்டம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது மற்றும் பாலஸ்தீனியர்கள் மேற்குக் கரையின் சில பகுதிகளுக்கு இஸ்ரேலிய கூற்றுக்களை எதிர்கால அரசுக்கு விரும்புவதாக அங்கீகரிக்கும் என்ற அச்சத்தில் அதை நிராகரித்துள்ளனர்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒருதலைப்பட்சமாக ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அங்கீகரித்ததிலிருந்து பாலஸ்தீனிய தலைமை அமெரிக்க அரசாங்கத்தை புறக்கணடித்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47