தடகள அரங்கில் 10 ஆண்டுகள் கொடி கட்டிப் பறந்த ஜமைக்காவின் உசெய்ன்  போல்ட் பெண் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளார்.

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில்  9.58  செக்கன்களில் ஓடி குறைவான நேரப்பெறுதியில் 100 மீற்றர் தூரத்தை எட்டியவர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரராகத் திகழும்  உசெய்ன் போல்ட், ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கங்களயும் உலக தடகள அரங்கில் 11 தங்கப் பதக்கங்களையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். 2017 ஆம் ஆண்டு தடகள அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற போல்ட்.

மின்னல்வேக மனிதராக வலம் வந்த 33 வயதான உசேன் போல்ட், தனது காதலி 30 வயதான காசி பென்னட்டுடன் குடும்ப வாழ்க்கையில் இணைந்துள்ளார். இதைத் தொடர்ந்து கர்ப்பமடைந்த காசி பென்னட்டுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தந்தை அந்தஸ்தை எட்டிய உசெய்ன் போல்ட்டுக்கு ஜமைக்கா பிரதமர் அண்ட்ரூ ஹோல்னெஸ் மற்றும் அவரது ரசிகர் பட்டாளமும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.