இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டிகளை எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடகியுள்ள நிலையில் அந்த லீக்கைச் சேர்ந்த ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலிஷ் பிரீமியர் லீக்கில் அங்கம் வகிக்கும் கழகங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முறையாக பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தது.

இந்தப் பயிற்சியில் வீரர்கள் ஒவ்வொருவரும் எவரையும் தொடாமல் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இங்கிலிஷ் பிரீமியர் லீக்கின் 19 கழகங்களைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தமாக 748 பேர் மீது கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்றுக்கு  உள்ளாகியிருக்கும்  வீரர்கள்  மற்றும்  ஊழியர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.