மைனா, சாட்டை உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜோன் மேக்ஸ் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘கா’. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் நாஞ்சில் இயக்கியிருக்கிறார். 

இக் கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடித்திருக்கிறார். அவருடன் மூத்த நடிகர் சலீம் கௌஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அறிவழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, சுந்தர் சி பாபு இசையமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி நடிகை ஆண்ட்ரியா பேசுகையில்,

“ காட்டுக்குள் நடக்கும் அதிரடி சம்பவத்தை மையமாக வைத்து திரில்லர் படமாக ‘கா’ உருவாக்கியிருக்கிறது. இப்படத்திற்காக ஆந்திரா, ஜார்கண்ட், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடத்தினோம். 

வனங்களில் சுற்றித்திரியும் புகைப்பட கலைஞராக, ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்திற்காக சில சாகச காட்சிகளிலும், சில எக்சன் காட்சிகளிலும் துணிச்சலாக நடித்திருக்கிறேன். இதுவரை இல்லாத புதிய பரிமாணத்தில் எம்மை திரையில் காணலாம்.” என்றார்.

இப்படத்தின் டிரைலர் இன்று மாலை நான்கு மணியளவில் இணையதளத்தில் வெளியாகிறது.