அட்டன் - செனன் பகுதியில் மண்சரிவு ; 6 குடும்பங்கள் நிர்க்கதி

Published By: Digital Desk 3

20 May, 2020 | 04:20 PM
image

மலைநாட்டில் நிலவும்  சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செனன் தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஊடாக தோட்ட கிராம சேவகர் வழங்கி வருகிறார்.

மேற்படி தோட்டத்தில் ஒரு வீடு மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலேயே அபாய வலயத்தில் இருந்த 6 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.

மலைநாட்டில் இன்று காலைவேளையில் கனமழை பெய்யாத போதிலும், அடுத்துவரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதால் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17