ஊடரங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக நாடு முழுவதும் கைதுசெய்யப்பட்டவர்களின் தொகையானது 60 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

அதன்படி மார்ச் 20 ஆம் திகதி முதல் இன்று காலை 6.00 மணியுடனான காலப் பகுதி வரை மொத்தமாக 60,425 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 16,924 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை 6.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரக் காலப் பகுதியில் மாத்திரம் 660 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 256 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மார்ச் 18 முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு மீறியது தொடர்பாக 17,193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 6,480 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.