நாட்டை ஸ்திரமற்றதாக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி - சுதந்திரக் கட்சி விசனம்

19 May, 2020 | 09:46 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்தல் காலம் தாழ்த்தப்படுகிறது. தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்நிலையில் நாட்டை ஸ்திரமற்றதாக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளது.

பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். எனினும் அவ்வாறு செய்ய வேண்டிய தேவை கிடையாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :

திங்கட்கிழமை நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. விசேடமாக நடைபெறவுள்ள தேர்தலுக்கான நடவடிக்கைகள், தேர்தல் நடத்தப்படும் போது சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்றம் இன்றி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே பொதுத் தேர்தலை ஜனாதிபதியால் காலம் தாழ்த்த முடியாது. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக ஜூன் 20 வரை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அது தேர்தல் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே இவ்வாறு தேர்தல் காலம் தாழ்த்தப்படுகிறது. தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்நிலையில் நாட்டை ஸ்திரமற்றதாக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளது. பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். எனினும் அவ்வாறு செய்ய வேண்டிய தேவை கிடையாது.

இவர்கள் பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்காமையே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணமாகும். தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை பெறுமளவிற்கு நாடு ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.

அவர்கள் மக்கள் பற்றி சிந்திக்காது தேர்தலை காலம் தாழ்த்தி எதிர்கட்சி அரசியலை முன்னெடுக்கவே முயற்சிகின்றனர். அரசியல் வேலைத்திட்டங்களை விஸ்தரிக்கின்றனர். நாம் அதனை எதிர்க்கின்றோம். பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் தேர்தலை நடத்துவதற்கான தொடர் திட்டங்களை தேர்தல் ஆணைக்குழுவில் முன்வைக்கவுள்ளோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49