பரீட்சையில் சித்தியடையத் தவறியதன் காரணமாக கவலையுடன் இருந்த இளம் பௌத்த துறவி ஒருவர் விகாரையின் புதிய கட்டிடத் தொகுதியில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சீதுவை சுகத்தாராம விகாரையில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. பதுள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த கஹட்டருப்பே ஞானரத்ன (19 வயது) என்ற பௌத்த தேரரே தற்கொலை செய்து கொண்டவராவார். 

2006 ஆம் ஆண்டு தேரராக துறவரத்தை ஆரம்பித்து கடந்த 10 ஆண்டு காலமாக பிரிவெனா கல்வியை கற்ற குறித்த பிக்கு அண்மையில் இடம்பெற்ற பிரிவெனா பரீட்சையில் சித்தியடையத் தவறியதன் காரணமாக பெரும் கவலையுடன் இருந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை  அதிகாலை  தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.