300 இலங்கையருடன் குவைத்திலிருந்து விமானமொன்று சற்று நேரத்திற்கு முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் குவைத்தில் சிக்கித்தவித்த 300 இலங்கையர்களே அவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

குவைத்திற்கு சொந்தமான குவைத் எயார்வேஸ் விசேட விமானத்தின் மூலமே இவர்கள் அனைவரும் இலங்கைக்கு அழைத்துவரப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.