ரசிகர்களின்றி வெறிச்சோடிய மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது மணமகள் இல்லாத திருமணம் போன்றது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சொய்ப் அக்தர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்திலிருந்து மெல்ல மெல்ல  இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நாடுகளில் விளையாட்டு போட்டிகள் ரசிகர்கள் இல்லாத வெறிச்சோடிய மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.இதுவரையில் தென் கொரியா, ஜேர்ர்மனி நாடுகள் கால்பந்தாட்டப் போட்டிகளை ஆரம்பித்துள்ளன. இத்தாலி, ஸ்பெய்ன் நாடுகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் போட்டி என்பது மணமகள் இல்லாத திருமணம் போன்றது என்று சொய்ப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  அக்தர் கூறுகையில், ‘‘ரசிகர்கள் இன்றி போட்டிகளை நடத்துவது கிரிக்கெட் சபைகளுக்கு சாத்தியமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கலாம். ஆனால் ‘மார்க்கெட்’ செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை. ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் என்பது மணமகள் இல்லாத திருமணம் போன்றது. போட்டிகளில் விளையாடுவதற்கு ரசிகர்கள் கூட்டம் தேவை. இன்னும் ஒரு வருடத்துக்குள் கொரோனா வைரஸ் சூழ்நிலை சரியாகிவிடும் என்று நம்புகிறேன்’’ என்றார்.