ரோயல் கல்லூரியில் இவ்வாண்டுக்கு உயர் தரத்தித்திற்கு அனுமதி பொறவிரும்புவோர் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://royalcollege.lk/2020/04/a-l-applications-2020/  என்ற இணையதளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

ரோயல் கல்லூரிக்கு உயர் தரத்திற்கு விண்ணப்பிப்பதற்கு 3 C சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு உயர் தரத்தில் பௌதீக விஞ்ஞானம் மற்றும் உயிரியல் விஞ்ஞான பாடத்தை தெரிவு செய்யும் மாணவர்கள் விஞ்ஞான பாடத்தில்  C சித்தியையும் கணித பாடத்தில் S சித்தியையும் பெற்றிருத்தல் வேண்டும்.

அதே போன்று வணிக பாடத்தை தெரிவு செய்யும் மாணவர்கள் சாதாரண தரத்தில் வணிக பாடத்தில் S சித்தியைப் பெற்றிருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.