அவிசாவளை கண்டி பிரதான வீதியில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அவிசாவளை கண்டி பிரதான வீதியில், தெஹியோவிட்ட  ஈரியகொல்ல பகுதியில் இன்று காலை 7.00 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்றும், ஜீப் வண்டியொன்றும் நேருக்குநேர் மோதி  விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி  சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். கரவனல்லை பக்கமாக இருந்து வேகமாக  பயணித்த ஜீப் வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த முச்சக்கர வண்டியில் மோதி வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீட்டில் இடிப்பட்டு குடைசாந்து விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பாக அவிசாவளை பொலிசார்  மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.