விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முயற்சித்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் நேற்று சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடக்கரைச்சேனை பிரதேசத்தில் வைத்து சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை பொலிஸார் இன்று மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி  நிபந்தனைகளுடனான  பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளார். 

இதனை தொடர்ந்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.