சீரற்ற காலநிலை காரணமாக தொடரும் மழையால், பலாங்கொடை மற்றும் நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கின.

இதனால் குறித்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை  நாட்டின் சில பகுதிகளில் இன்று 200 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.