சீனாவின் தென்மேற்கில் உள்ள  யுன்னான் மாகாணத்தின் கியாஜியோ கவுண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

குறித்த நிலநடுக்கம் 5.0 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் பல கட்டிடங்கள் அதிர்ந்துள்ள நிலையில், மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  

நேற்று திங்கட்கிழமை  இரவு 9.47 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

நிலநடுக்கத்தால் கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பேர் பலியானதாகவும் 24 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 6.0 ரிச்டர் அளவான நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதோடு, கிட்டத்தட்ட 200 பேர் காயமடைந்தனர்.

2008 ஆம் ஆண்டில் சிச்சுவானில் ஏற்பட்ட 7.9 ரிச்டர் அளவுகோலில் பதிவான நிலநடுக்கத்தில் 87,000 பேர் இறந்தது அல்லது காணாமல் போயுள்ளனர்.

Photo: AFP