இறுதியாக அடையாளம் காணப்பட்ட 6 கொரோனா தொற்றாளர்களில் 5 பேர் கடற்படையினர் - இராணுவத் தளபதி

Published By: J.G.Stephan

19 May, 2020 | 07:39 AM
image

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 6 பேரில், 5 பேர் கடற்படை வீரர்கள் எனவும், ஒருவர், சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளதாகவும்,  கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 559 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 424 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

149 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44