ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' என்ற திரைப்படம் நேரடியாக டிஜிற்றல் தளத்தில் வெளியாவதை போல், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த 'பெண்குயின்' என்ற திரைப்படமும் நேரடியாக டிஜிற்றல் தளத்தில் வெளியாகிறது.

அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் 'பெண்குயின்'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்தப் படத்திற்கு, கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மிஸ்ட்ரி ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படம் பட மாளிகையில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரைம் என்ற டிஜிற்றல் தளத்தில் ஜூன் 19 ஆம் திகதியன்று வெளியாகிறது. இதனை முன்னணி இயக்குனரான கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது.

மே 29ஆம் திகதியன்று ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படம் இதே டிஜிற்றல்  தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் 19ம் திகதியன்று கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் பெண்குயின் என்ற திரைப்படமும் நேரடியாக வெளியாகிறது.இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகிறது.இதனால் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் தற்போது இந்த எப்ஸை பதிவிறக்கம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.