இத்தாலியின் மிலானில் அமைந்துள்ள புனித மரியா டெல் ரொசாரியோ தேவாலயத்தில் இன்று காலை ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியில் கலந்துகொண்டவர்களுக்கு துக்கத்தின் மத்தியில் ஆறுதல் அளிப்பதாக அமைந்தது.

இத்தாலியில் 10 வாரங்களின் பின்னர் விசுவாசிகள் பங்குபற்றிய முதலாவது திருப்பலி இதுவாகும்.

ஆறுதல் தேடியும் இத்தாலியின் மீட்சிக்காக பிரார்த்திக்கவுமே விசுவாசிகள் தேவாலயத்துக்கு சென்றனர். அவர்கள் அனைவரும் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றினர்.

திருப்பலி ஆரம்பமாவதற்கு முன்னர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது. விசுவாசிகள் சமூக இடைவெளியைப் பேணி அமர்ந்தனர். மக்களின் கைகளில் நற்கருணையை வைப்பதற்காக குருவானவர் கையுறை அணிந்திருந்தார். யாருக்கும் நாவில் நற்கருணை ஊட்டப்படவில்லை.

'கிறிஸ்துவின் சரீரத்தை கையுறைககைக் கொண்டு ஏந்துவது விசித்திரமான உணர்வைத் தோற்றுவித்தது' என திருப்பலியை ஒப்புக்கொடுத்த அருட்தந்தை மார்க்கோ போர்கி கூறினார்.

ஆனால், ஆண்டவரை நெருங்குவதற்கு மக்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தமை முக்கியமானது என்றார் அவர்.