பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9ஆம் திகதியன்று வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா பாதிப்பின் காரணமாக வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த திரைப்படம் தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் திகதியன்று வெளியாகும் என தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போதுள்ள சூழலில் பட மாளிகைகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்தும், இதுதொடர்பாக அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் குறித்தும் உறுதியாக எதுவும் தெரிய வராததால், மாஸ்டர் திரைப்படம் ஜூன் 22ஆம் திகதி அன்று  வெளியாக வாய்ப்பில்லை என்று தெரியவருகிறது.

இந்நிலையில் ரசிகர்களை சமாதானப்படுத்த படக்குழுவினர், அவரது பிறந்தநாளன்று படத்தின் டிரெய்லரை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். இதற்காகத்தான் கடந்த சில தினங்களாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்ரெய்லருக்கான இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் இப்படத்தில் நடித்திருக்கும் நடிகரான அர்ஜுன் தாஸ், இணையப்பக்கத்தில் ‘மாஸ்டர்’ டிரைலர் குறித்து சில விடயங்களை தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் ட்ரெய்லர், அவரது பிறந்த நாளான ஜூன் மாதம் 22ஆம் திகதியன்று வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.