ரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ள Water Garden Sigiriya

Published By: Priyatharshan

28 Jun, 2016 | 12:43 PM
image

உலகிலுள்ள வசீகரிக்கும் ராஜதானியங்களுள் ஒன்றாக கொண்டாடப்பட்டு வரும் சிகிரியா, இலங்கையின் கலாச்சாரம் மற்றும் அழகினை வெளியுலகிற்கு எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது.

 அற்புதமான சிகிரியா மலைக்குன்றின் அருகாமையில் அமைந்துள்ள வோட்டர் கார்டன் சிகிரியா (Water Garden Sigiriya) ஓய்வு விடுதியானது விருந்தினர்களுக்கு தனிச்சிறப்பு மிக்க அனுபவம் மற்றும் எல்லையற்ற சௌகரியத்தை வழங்கும் வகையில் எதிர்வரும் ஜுலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அப்பகுதியின் பேரமைதியால் ஈர்க்கப்பட்ட Blue Water Wadduwa இன் உரிமையாளரான Union Resorts & Spa லிமிடெட் நிறுவனமானது 35 ஏக்கர் நிலப்பரப்பில் சுற்றிலும் நீரோட்டத்தினால் சூழப்பட்ட ஓய்வுக்கு ஏற்ற சூழலில் இலங்கை கலாச்சாரமும் ஒன்றிணைந்த இந்த புதிய விடுதியை அமைத்து விருந்தினர்களுக்கு மனம் மயக்கும் அனுபவத்தை வழங்க முன்வந்துள்ளது.

“சிகிரியாவில் அமைந்துள்ள எமது புதிய வோட்டர் கார்டன் சொகுசு ஓய்வு விடுதியில் விரைவில் விருந்தினர்களை வரவேற்க எதிர்பார்த்துள்ளோம். 

இப்பகுதியின் சாரம்சம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மேம்படுத்திக் காட்டக்கூடிய வகையில் சிகிரியாவின் அழகினை வெளிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது” என Union Resorts and Spas இன் தலைவர் அஜித் விஜயசேகர தெரிவித்தார்.

பசுமையாக காட்சியளிக்கும் இப்பகுதியின் நிலப்பரப்பு இந்த ஓய்வு விடுதியின் தனித்தன்மை மற்றும் உள்ளார்த்தத்தை மேம்படுத்துவதாகவுள்ளது. இந்த ஓய்வு விடுதியில் உள்ள 30 villa களும் சமகால உட்புற அலங்காரங்களுடன் கூடிய கட்டிடக்கலை மற்றும் பாணியில் அமைக்கப்பட்டுள்ள ஆடம்பரமான தங்குமிட வசதியாக இன்று புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர்களாக திகழும் ஜெஃரி பவா, சன்ன தஸ்வத்த ஆகியோரினால் நிர்மாணிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புடன், சூழல் தனிச்சிறப்புமிக்கதுமான சொகுசு ஓய்வு விடுதிகளை ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் அளித்துள்ளனர்.

இந்த தனிச்சிறப்புமிக்க ஓய்வு விடுதியானது அமைப்பு, பட்டியல், சுற்றுப்புறச் சூழலை வழங்குகிறது.

உள்நாட்டு சமையல் மற்றும் ஏனைய சர்வதேச சுவைகளுடன் சுவைமிகு மசாலாப்பொருட்கள் உள்ளடக்கிய வகையில் சமையல் தயார் செய்யப்படவுள்ளன. விடுதியின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள மிகப்பிரமாண்டமான விளக்குகள் இலங்கையின் தலைசிறந்த கைவினை கலைஞரான லக்கி சேனாநாயக்கவினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக மதுபான விடுதி சுற்றுப்புற அழகுடன் தென்படுவதுடன், உள்நாட்டு வரலாறு மற்றும் கட்டிடக்கலை சிறப்புக்களை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

Water Garden Sigiriya Spa ஆனது களைப்பை நீக்கி, மனதை புத்துணர்வாக்குவதாக அமைந்துள்ளது. ஆடம்பரமான பொருட்களுடன் பாரம்பரிய இலங்கை மற்றும் ஆசிய தெரபிகள் உள்ளடக்கி நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் கைகளினால் அனைத்து விதமான ஸ்பா சிகிச்சைகளும் அளிக்கப்படவுள்ளன.

இந்த விடுதியின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட பாரிய நீச்சல் தடாகத்தில் விருந்தினர்கள் குதூகலிக்க முடிவதுடன், உடற்பயிற்சி மையத்தில் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளவும் முடியும். மேலும் வர்த்தகம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளுக்காக மாநாட்டு மண்டபங்களையும் இந்த விடுதி வழங்கவுள்ளது.

மேலும் இங்கு வருகை தரும் விருந்தாளிகள் அருகிலிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை கண்டுகளிக்கவும், சவாரி பயணங்கள் செல்லவும் மற்றும் இலங்கையின் இயற்கை எழிலை கண்டு ரசிப்பதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

இப்பகுதி சார்ந்த புட்டிக் அலங்காரங்கள் Water Garden Sigiriya இல் காணப்படுகின்றன. எழில்மிகு இயற்கை காட்சிகள் மற்றும் ஆடம்பரமான நவீன சௌகரியங்களை வழங்குவதுடன், மறக்க முடியாத அனுபவத்தையும் விருந்தாளிகளுக்கு நிச்சயமாக வழங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்