வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு வாக்குறுதியை நிறைவேற்ற, இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, டிஜிட்டல் தளங்களின் பயன்பாட்டை மேலும் ஊக்குவிப்பதற்காக MyDialog App ஊடாக மேற்கொள்ளப்படும் ரீலோட் மற்றும் பில் கொடுப்பனவுகளுக்கு, 15 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு Cash Back சலுகையினை வழங்குகின்றது.

Automated test transaction மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னர் MyDialog App இல் தங்கள் கிரெடிட்/டெபிட் கார்ட் விபரங்களை சேமிக்கும் வாடிக்கையாளர்கள், வெற்றிகரமாக சரிபார்த்த பின்னர், MyDialog App ஊடாக மேற்கொள்ளப்படும் முதல் ரீலோட் /பில் கட்டணத்தில் 100% Cash Back சலுகையினைபெற்றுக்கொள்ளும் உரிமை உண்டு. வாடிக்கையாளர்கள் ஜுன் 14ஆம் திகதி வரை அதிகபட்சமாக ரூ.1000 வரையில் Cash Back சலுகையாக பெற்றுக்கொள்ள முடியும். எந்தவொரு மொபைல், DTV மற்றும் Home Broadband இணைப்புகளுக்கும் பில் கட்டணங்களை அல்லது ரீலோட்களை மேற்கொள்ள முடியும். மேலும் எந்தவொரு இணைப்பிற்கும் எவ்வளவு தொகையினையும் பில் கொடுப்பனவாகவும் ரீலோடாகவும்; மேற்கொள்ள முடியும். App இல் சேமிக்கப்பட்ட வாடிக்கையாளரின் முதன்மை இலக்கத்திற்கே வெகுமதி வழங்கப்படும்;. அங்கு முற்கொடுப்பனவு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு Cash Back சலுகையானது வாடிக்கையாளரின் மொபைல் மிகுதியுடன் இணைக்கப்படும். 

மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு, Cash Back சலுகையானது அவர்களின் மாத பில் தொகையிலிருந்து கழித்துக்கொள்ளப்படும். வாடிக்கையாளர்கள் பக்கேஜ் பெறுமதியினை நேரடியாக ரீலோட் செய்வதன் மூலமும் 4G video blaster/ triple blaster பக்கேஜ்களை செயற்படுத்திக்கொள்ள முடியும். இது போன்ற சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளரின் பணப்பை மிகுதிக்கு சமமான தொகை 100% Cash Back சலுகையாக வழங்கப்படும். 

இந்த சலுகை, கோவிட்-19 தொற்றுநோயின் பின்னணியில், இலங்கையர்கள் தங்கள் மொபைல் இணைப்புகளை ரீலோட் செய்ய அல்லது தங்கள் வீடுகளின் பாதுகாப்பாக இருந்து எளிதாகவும்வசதியாகவும் கட்டணம் செலுத்த ஊக்குவிக்கப்படுகின்றது.

மேலதிகமாக, நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கையர்கள் தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவின் போது இணைந்திருப்பதை உறுதி செய்வதற்கும், ஊரடங்கு உத்தரவு காலத்தில் தங்கள் மொபைல் இணைப்பினை ரீலோட் செய்து பயன்படுத்தவும் முடியாத வாடிக்கையாளர்களுக்கு இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, D2D 250 நிமிடங்கள், D2D 250 SMS, Anytime Data 1GB போன்றவற்றை உள்ளடக்கிய 7 நாள் விசேட சலுகையினை வழங்கியது. 

மேலும் வாடிக்கையாளர்கள், பாதுகாப்பாக இருப்பதையும், எப்போதும் இணைந்திருப்பதனையும் உறுதிசெய்யும் முயற்சிகளில் e-Connect, e-Learn, e-Health, e-Tainment, e-Care மற்றும் e-Work solutions (https://www.dialog.lk/home வழியாக அணுகலாம்) ஆகியவற்றுக்கு இலவச அணுகலையும் வழங்குகின்றது.