ஒலுவில் தனிப்படுத்தல் முகாமிலிருந்த 5 கடற்படையினருக்கு கொரோனா தொற்று - வைத்தியர் சுகுணன்

18 May, 2020 | 07:59 PM
image

அம்பாறை மாவட்டம்  ஒலுவில் துறைமுக பகுதியில்  அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 05 கடற்படையினருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு இன்று (18) பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

கடந்த சில நாட்களுக்கு முன்னர்   ஜாஎல பிரதேசத்தில் இருந்து  அழைத்துவரப்பட்ட 80 கடற்படையினர்  ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இதில்  05 கடற்படையினர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு  கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மூவர் வெலிகந்தை பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கும் ஏனைய  இருவர் கொழும்புக்கும் மாற்றப்பட்டுள்ளனர் .

இது தவிர மேலும்  05 கடற்படையினர் கொரோனாத் தொற்று பரிசோதனைக்காக தற்போது  மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்  தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டுள்ள ஏனைய  70 கடற்படையினரும்  நாளை (19) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக  அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28
news-image

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி....

2025-03-15 18:52:01
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இளைஞன்...

2025-03-15 16:56:03
news-image

21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன்...

2025-03-15 16:43:26