சீனாவின் மாபெரும் ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான MEIZU,  இலங்கையில் தனது விற்பனை செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. 

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களில் MEIZU தொலைபேசிகள் விநியோகிக்கும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதுடன் வெகுவிரைவில் நாடு முழுவதிலும் இந்தச் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்படவுள்ளன. 

இதன் மூலமாக இலங்கையின் கையடக்க தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு புதிய ஸ்மார்ட்ஃபோன் அனுபவத்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

மிகவும் வேகமான வளர்ந்து வரும் ஸ்மார்ட்ஃபோன் துறையில் அதிகளவு போட்டிகரத்தன்மையை எதிர்நோக்கியுள்ளதுடன், பல தயாரிப்புகள் இதுவரையில் சந்தையில் காணப்படுகின்றன.

 எனவே, உயர் தரத்திலும் உயர் வினைத்திறன் வாய்ந்த ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை தெரிவு செய்து கொள்வது என்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சவாலான விடயமாக அமைந்துள்ளது.

அதிகளவு பணத்தை செலவிட்டு கொள்வனவு செய்யப்படும் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களிலமைந்த கையடக்க தொலைபேசிகள், இளைஞர்களின் சகல தேவைகளையும் நிவர்த்தி செய்கின்றனவா என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

இந்த நிலையை நன்கு உணர்ந்து கொண்ட இந்நாட்டின் முன்னணி கையடக்கத்தொலைபேசிகள் விற்பனையாளரான Celcity Lanka நிறுவனத்தின் மூலமாக, உலகின் உயர்ந்த தொழில்நுட்பம் மற்றும் வினைத்திறன் கொண்ட MEIZU ஸ்மார்ட்ஃபோன் வகைகள் இலங்கையர்களுக்காக அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. MEIZU ஸ்மார்ட்ஃபோனின் விசேட அம்சம் யாதெனில், உலோகத்தினாலான கட்டமைப்பு மற்றும் M touch தொழில்நுட்பத்தின் மூலமாக Fingerprint recognition ஐ தொலைபேசிக்கு வழங்கி பாதுகாப்பை உறுதி செய்கிறது.

“Quality for Young” எனும் தொனிப்பொருளுக்கமைய, 2003 ஆம் ஆண்டில் தனது உற்பத்திகளை ஆரம்பித்த MEIZU ஸ்மார்ட்ஃபோன் இது வரையில் உலகம் முழுவதும் 40 நாடுகளில் 25 மில்லியனுக்கும் அதிகமான சாதனங்களை விற்பனை செய்துள்ளது. 

சீனாவில் முதல் தடவையாக ஸ்மார்ட்ஃபோன் தொலைபேசியை அறிமுகம் செய்த முன்னோடியான MEIZU, இதுவரை சீனாவில் 10,000க்கும் அதிகமான விற்பனை நிலையங்களை கொண்டுள்ளதுடன், முன்னணி ஸ்மார்ட்ஃபோன் தொலைபேசி விற்பனையாளராகவும் திகழ்கிறது.

MEIZU ஸ்மார்ட்ஃபோன் 3 உற்பத்திகள் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், அந்த உற்பத்திகள் அனைத்தும் போட்டிகரமான விலையிலும் ஏனைய ஸ்மார்ட்ஃபோன்களை விட அதிகளவு வசதிகளை கொண்டதாகவும் உயர் தரத்தில் அமைந்துள்ளன.

வெளிப்புற மற்றும் உள்ளக உயர்ந்த வடிவமைப்பைக் கொண்டுள்ள MEIZU கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் மேம்படுத்தப்பட்ட Android மென்பொருள் (Flyme என அழைக்கப்படுகிறது) உறுதிப்பாட்டையும், வேகத்தையும் உறுதி செய்கின்றது.

MEIZU ஸ்மார்ட்ஃபோன் தொடர்பில் Celcity Lanka நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்ஜீவ சமரசிங்க கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கையில் ஸ்மார்ட்ஃபோன் தொழிற்துறை என்பது உறுதியான வளர்ச்சியடைந்து வருகிறது. சிறந்த எதிர்காலத்தைக் கொண்ட ஒரு துறையாகும். இதுபோன்றதொரு துறைக்கு சீனாவின் மாபெரும் ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமாக கருதப்படும் MEIZU அறிமுகத்தின் மூலமாக இந்நாட்டின் வாடிக்கையாளர்களுக்கு செலுத்தும் பணத்துக்கு பெறுமதியான உயர் தரத்திலமைந்த மற்றும் உயர் வினைத்திறன் வாய்ந்த சிறந்த கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார். 

விற்பனைத் துறையில் 28 வருட கால முன் அனுபவத்தைக் கொண்டுள்ள சஞ்ஜீவ சமரசிங்க, இந்நாட்டின் முன்னணி தொலைபேசி நிறுவனங்களில் 21 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய அனுபவத்தைப் கொண்டுள்ள சிரேஷ்ட விற்பனை நிபுணராவார்.