முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளிற்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை வழிபாடுகள் வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது அரசியல் வாதிகள் மற்றும் அந்தணர்கள், சமூக ஆர்வலர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு பிரார்தனையை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னரே பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் ஆலயத்திற்கு வெளியில் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஆத்ம சாந்தி பூஜை இடம்பெற்று கொண்டிருந்தபோது ஆலயத்திற்குள் நுளைந்த புலனாய்வு பிரிவு அலுவலர் ஒருவர் நிகழ்வினையும், நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களையும் புகைப்படம் எடுத்திருந்தார். ஆலயத்திற்குள் நுளைந்து அவர் புகைப்படம் எடுத்தமை அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.