கொரோனாவால், நாட்டில்  நிலவிவரும் அசாதாரண சூழ்நிலைக்காாரணமாக, முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரை (16.05.2020) தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த சுமார் 9,374 பேர் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 

இதேவேளை, நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 32 தனிமைப்படுத்தல் மையங்களில் தற்போது, சுமார் 2,734 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.