நாட்டில் இன்றறைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 21 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 559 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 981 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

தற்போது வைத்தியசாலையில் 413 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும், நோய்த் தொற்று சந்தேகத்தில் 149 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலையில் உள்ளார்கள்.

அதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளார்கள்.