அம்பாறை, உஹன பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தள்ளார்.

நேற்று (27)  உஹன, கரங்காவ கல்லறை பகுதிக்கு அருகில் வைத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காட்டு யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே குறித்த நபர் உயிரிழந்தள்ளார்.

உயிரிழந்த நபர் உஹன, திஸ்ஸபுர பகுதியை சேர்ந்த  டபுள்யூ.ஏ. சம்பத் என பொலிஸார் தெரிவித்தனர்.