இலங்கையில் மேலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிக்கும் தீர்மானம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

சுமார் 40,000 இருக்கைகளை கொண்ட நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஒன்று ஹோமாகம பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

ஹோமாகமவில் அமைக்கப்படவுள்ள இந்த கிரிக்கெட் மைதானத்தின் நிலப் பகுதியை அமைச்சர் பந்துல குணவர்தனவும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்டோர் நேற்று சென்று பார்வையிட்டுள்ளனர். 

பகலிரவு கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடியவகையில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மைதானம் கொழும்பு மாவட்டத்தின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என்று ஷம்மி சில்வா இதன்போது கூறியுள்ளார்.

இந்த மைதான நிர்மாணத்திற்காக 30 - 40 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்  நிலையிலேயே இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்  தலைவர் மஹேல ஜெயவர்தன, நாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் மைதானங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிலையில், இலங்கைக்கு மேலும் ஒரு மைதானம் அவசியம் தான என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் எங்களிடம் இருக்கும் மைதானங்களில் போதுமான சர்வதேச அல்லது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் கூட இடம்பெறுவதில்லை என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திக்கு 

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள பிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கு