முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பொலிஸ் ,புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளபட்டு வருகின்றது .

இன்று காலை 10.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் ஏற்பாட்டு குழுவால் முன்னெடுக்க பட்டு வருகின்றது .

இதன் படி 10.30 மணிக்கு பொது சுடர் ஏற்றப்பட்டு ,அகவணக்கம் செலுத்தப்பட்டு பிரகடன உரை நிகழ்த்த படவுள்ளது.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் தோறும் இராணுவ, பொலிஸ் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நினைவேந்தல் வளாகத்துக்கு அண்மையாக பொலிஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது .