நினைவேந்தலை நடத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 11 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு

17 May, 2020 | 10:50 PM
image

மே மாதம் 17 ஆம் திகதி தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் 11 பேரையும் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுபதிகாரி பிரசாத் பெர்னாண்டோவால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்

பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் 

தேசிய அமைப்பாளா், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்

சட்ட ஆலோசகா் சட்டத்தரணி கனரட்ணம் சுகாஷ்

சட்ட ஆலோசகா் சட்டத்தரணி நடராசா காண்டீபன்

யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினா் வரதராஜன் பாா்த்திபன்

யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினா் தனுசன்

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினா் கிருபாகரன்

கனகசபை விஸ்ணுகாந்

சுதாகரன்

தமிழ்மதி

ஆகியோரை எதிர்வரும் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்துமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பான கட்டளை யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு 17 ஆம் திகதி  குருநகா், புனித ஜேம்ஸ் தேவாலயம், மற்றும் தமிழாராச்சி மாநாட்டு நினைவிடம் ஆகிய இடங்களில் அஞ்சலிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நிகழ்வுகளை நடத்தியமையால் இந்த கட்டளை நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58